Saturday, October 18, 2008

சிவசக்தி



சிவசக்தி

எள்ளி நகைத்தும் ஏளனப் பார்வையுமாய்

சமூகத்தின் சாட்டையால் துவண்டு

ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட

ஓர் இனம்


படைப்பின் பிழையா இவர்கள்.?

அல்லவே

பரமேஸ்வரனின் உருவமாய் வாழும்

சிவசக்திகள் இவர்கள் தாம் திருநங்கையர்


பசித் தீர கையேந்தும் சோகம்..

தாகத்தை தணித்துக் கொள்ள மட்டுமே

இவர் தேகம் என

சித்தரிக்கப்பட்டு சீரழியும் அவலம்


மாறட்டும் இந்த மதியில்லா முறைகள்

கலைவோமே கண்கட்டப்பட்ட கண்ணோட்டங்களை


வருத்தங்கள் வேண்டாம்

வழித்தவறாமல் வாழ வழி செய்வோம்


பரிதாபங்கள் வேண்டாம்

புன்னகை புரிய துணையிருப்போம்..


ஆராத்திக்க வேண்டாம்

நம்மில் ஒருவராய் ஏற்றுக்கொள்வோம்


புதியதொரு விடியலுக்குப் பாதை வகுப்போம்

Saturday, October 4, 2008

மரப்பாச்சி பொம்மை


மரப்பாச்சி பொம்மை


பணத்தைக் கொடுத்து பொருள் பெறுவது தானே சந்தை

இதென்ன பொருளோடு சேர்த்து பணமும் பெற்றுக்கொள்ளும் விந்தை?

இங்கு இவள் விலைப் போகக் காத்திருக்கும்

உயிருள்ள மரப்பாச்சி பொம்மை.

“பொம்மை அழகாகவும், அறிவாகவும், அன்பாகவும் ,

அடக்கமாகவும் இருக்க வேண்டும்”

இவை வாங்குபவன் இடும் விதிகள்!!!!

வேடிக்கையாகவும்.வேதனையாகவும்.

படிததும் நீ பாமரனாய்

சுயசிந்தனையற்றவனாய்

சொல்லிக்கொள்ளாதே வெட்கமின்றி வெளியில்

நீயும் ஓர் ஆண்மகன் என்று..

போதுமடி பேதையே நீ புண்பட்டது

உணர்ச்சிகளை உதறி ஊமையாய் இருந்தது

விதி என்ற விலங்கை உடைத்து

கோட்பாடற்ற கட்டுப்பாடுகளை கடந்து

உனக்கென்று உன் வாழ்க்கையை

உவகையுடன் வாழ்ந்துக் காட்டு

தன்மானத்தை இழந்து திருமணச் சந்தையில்

விலைப்போவதை விட தனிமரமாய்

வாழ்வதே மேல்…….