Monday, February 2, 2009

பிறப்பின் முற்றுப்புள்ளி




I DEDICATE THIS POEM TO MY DIVYA….



பிறப்பின் முற்றுப்புள்ளி

ஈடில்லா இழப்பை ஏற்க இயலாமல்

உன் விழிகளில் அந்த வலியறிந்த போது

கடவுளினும் கொடியவன் எவனுமில்லையென

என் இயலாமயை மறைத்துக் கொண்டேன்

துக்கத்தின் சுமையோ உன்னை அழுத்த

உனை தாங்கிக் கொள்ளத் துடிக்குதே என்னுள்ளம்.

ஒரு பிறப்பின் முற்றுப்புள்ளியில் இன்று

உன் புதிய அத்தியாயத்தின் தொடக்கம்

உனக்கான வார்த்தைகள் என்னிடத்தில் இல்லை...

ஆறுதல் கூறும் அறுகதையும் எனக்கில்லை

உன் கரம் பற்றி எனக்குள் பூட்டிக்கொண்டேன்

அன்றே

அது போதும்

என் வார்த்தைகளும் உணர்வுகளையும் வேதனையையும்

உனக்கு உணர்த்த……