
சிவசக்தி
எள்ளி நகைத்தும் ஏளனப் பார்வையுமாய்…
சமூகத்தின் சாட்டையால் துவண்டு
ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட
ஓர் இனம்…
படைப்பின் பிழையா இவர்கள்….?
அல்லவே…
பரமேஸ்வரனின் உருவமாய் வாழும்
சிவசக்திகள் இவர்கள் தாம் திருநங்கையர்…
பசித் தீர கையேந்தும் சோகம்..
தாகத்தை தணித்துக் கொள்ள மட்டுமே
இவர் தேகம் என…
சித்தரிக்கப்பட்டு சீரழியும் அவலம்…
மாறட்டும் இந்த மதியில்லா முறைகள்…
கலைவோமே கண்கட்டப்பட்ட கண்ணோட்டங்களை…
வருத்தங்கள் வேண்டாம்…
வழித்தவறாமல் வாழ வழி செய்வோம்…
பரிதாபங்கள் வேண்டாம்…
புன்னகை புரிய துணையிருப்போம்…..
ஆராத்திக்க வேண்டாம்…
நம்மில் ஒருவராய் ஏற்றுக்கொள்வோம்…
புதியதொரு விடியலுக்குப் பாதை வகுப்போம்…
3 comments:
Thirunangaiyarukku oru different title. Excellant thinking!
Yen Manadhil pala Naatkkalaaga Nerudiya - Maatrangal naera virumbiya oru unndha padaippinai Padaitthu Vittaai yen Seppu molikku sevi saaikkum/kaetkkum Chellamey :o)
Theeyinaal Theettapatta un Theerkamaana indha kavidhayai/Karuthukkalai paditthirundhal padaittha andha Brahmmaney Thirutthi Eludhiyiruppaaan Thirunangayarukkaana Thalaelutthinai.... Innum Madindhu vidavillai nam maanudamum adhanul vaalum manasaatchiyum , Thirutthi Theerppu Eludhuvom - indha Punidha piraviyin manadhil punnagai poochedigal pookka - mandhara avargalayum,avargalin Ennatthuyum madhippu kodutthu.... - Rakesh Sharma T @ Thirumaaran T
Impressive. :)
I'm expecting somethin on tamil eelam from you.
Try to write one.
Post a Comment