Saturday, September 6, 2008

நட்பின் சுவை


நட்பின் சுவை



நன்றாகவே கழிந்தது.

ஒன்றாக நாங்கள் சென்ற இசை விருந்து

ரசித்தது இசையை மட்டுமல்ல

எங்கள் நட்பின் சுவையும் தான்.

ஆடலும் எங்கள் அலம்பல்கலும்

கூச்சல்களும் எங்கள் கரவொலிகளையும் கண்டு

திசை மாறியதோ பல கண்கள்

இங்கு எங்கள் கச்சேரியை துவக்கிய பின்.

கைகோர்த்து ஆடியபோது எங்கள்

இதயத்துடிப்பு கூட “நட்பு நட்பு”

என்றல்லவா ஒலித்தது.

ஆனந்தத்தின் எல்லை எதுவென்று

என் விழிகள் உணர்த்தியது

வழிந்தோடும் கண்ணீர்.

“நாங்கள் நண்பர்கள்”

என்ற பெருமையும் பெருமிதமுமாய்

புன்னகையும் புன்சிரிப்புமாய்

நீடிக்க வேண்டும் எங்கள் பினைப்பு

நான் மண்ணுள் புதையும் வரை

என்ற பிராத்தனையுடன்.


No comments: