Saturday, September 6, 2008

என் முதல் காதல் கடிதம்


To amlu..,

With love swathi


இது தான் காதலா……



என் கண்ணிமை போல் காப்பவளே

நான் கண் மூடும் வரை கூட வருபவளே

கடவுளின் கருவறை போல்

என் உள்ளத்தில் வீற்றிருப்பவளே

எனக்கே எனக்கு மட்டும் உரியவளான

என் இரகசிய சினேகிதி.

என் புன்னகைக்கு பின் இருப்பதும் நீயே

என் அழுகைக்கு அணை போடுவதும் நீயே

என் துயரத்திற்க்கு தோள் கொடுப்பதும் நீயே

எட்டிப் பிடிக்க தட்டிக் கொடுப்பதும் நீயே

தடுக்கி விழுகையில் தூக்கி நிறுத்துவதும் நீயே

தவறு செய்யும் போது திருத்துவதும் நீயே

அதை தெரிந்தே செய்த போது

என்னை ------ வார்த்தைகளால்

அர்ச்சனை செய்வதும் நீயே

நேற்று வரை அறியவில்லை

நீயின்றி நான் இல்லையென்று

அறியா வயதில் தோழியாக

அறிந்த பின் தோழியாகவும்

என் வாழ்க்கைத் துணையாகவும்.

சொல்லித் தான் இனியும் உனக்கு

தெரிய வேண்டுமா?....

நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை!!!!!!!


4 comments:

ers said...

மனம் கவரும் விதமாய் கவிதை இடம் பெற்றிருந்தது. வாழ்த்துக்கள் சுவாதி.
இது போன்ற படைப்புக்களை நெல்லைதமிழ் இணையத்திற்கும் மின்அஞ்சலில் அனுப்பி வையுங்கள் பிரசுரிக்கிறோம். நன்றி.
வலை முகவரி
http://nellaitamil.com
மின் அஞ்சல்
infonellaitamil@gmail.com

K.Kaviraj said...

Hi Swathi ,

This is K.Kaviraj . We need ur email ID for contacting you on opening www.areapal.com for ur college . You can send a mail to "kaviraj.it@gmail.com"

suchi said...

hi kudumbi(rasathi)..
actually i didnt c ur letter in suresh punjabi sir's class..very nice ma :)

Mohan R said...

அருமையான கவிதை